![]() |
தேவையான பொருள்கள் -
- பாசிப்பயறு - 100 கிராம்
- அச்சு வெல்லம் - 50 கிராம்
- ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- உப்பு - 1 சிட்டிகை
- பாசிப்பயறை நன்றாக கழுவி விட்டு பயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு அடுப்பை மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- வெந்த பிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் பாசிப்பயறு வேக வைத்த தண்ணீர் (50 மில்லி) சேர்த்து அடுப்பில் வைக்கவும். அச்சுவெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரைப் பாகை ஊற்றி கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் அவித்து வைத்துள்ள பாசிப்பயறு, உப்பு இரண்டயும் சேர்க்கவும்.
- பாகு கெட்டியாகி வரும் போது ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பாசிப்பயறு இனிப்பு சுண்டல் ரெடி.