தேவையான பொருள்கள் -
- வெள்ளை முழு உளுந்து - 1 கப்
- கடலைப்பருப்பு - 1/2 கப்
- மிளகாய் வத்தல் - 10
- காயத்தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- அடுப்பில் வெறும் கடாயை வைத்து உளுந்தம் பருப்பை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வாசம் வரும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
- அடுத்து கடலைப்பருப்பை போட்டு வறுத்து அடுப்பை அணைத்து விடவும்.
- அந்த சூட்டில் மிளகாய் வத்தல், காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி வறுத்து வைத்திருக்கும் உளுந்தம் பருப்போடு சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.
- ஆறியதும் மிக்ஸ்சியில் திரிக்கவும். பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
ம்ம்ம் எங்கம்மாவும் இப்படிதான்
ReplyDeleteஇட்லி பொடி செய்வாங்க....
செய்முறை விளக்கம் தந்தமைக்கு
நன்றி அம்மா...!
உடன் வருகை தந்து அம்மாவின் குறிப்பையும் சொன்னதற்கு நன்றி அஜய்.
Deleteஅருமை..
ReplyDeleteபுழுங்கல் அரிசியை சற்று வறுத்து ஒன்றாக அரைத்துக் கொள்வதும் உண்டு..
வருகைக்கும் உங்கள் குறிப்புக்கும் நன்றி சார்.
DeleteIdly podi super ....
ReplyDeleteNaanum ippadithan seyven...
நன்றி ஷமீ.
Deleteசூப்பர் மா காலையில் தான் நுனிக்கினேன். ஆனால் கருப்பு உளுந்து,,
ReplyDeleteஇப்படியும் செய்வேன். பூண்டு கொஞ்சம் போடுவேன்.
நானும் தோல் உளுந்தோடு பூண்டு சேர்த்து பதிவு போட்டிருக்கிறேன். வருகைக்கு நன்றி மகேஸ்வரி.
Deleteஈசி இட்லி பொடி..இப்ப வரைக்கும் ஆச்சி வீட்லதான் பண்ணி தராங்க எனக்கு.. எப்பவாவது நான் பண்ணுவேன்.. ஒரு முறை இப்படி செய்து பார்க்கிறேன் அம்மா..
ReplyDeleteவருகைக்கு நன்றி அபி. கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லு.
Deleteஅருமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
Deleteஇட்லிப்பொடி பலவிதங்களில் பண்ணினாலும் இந்த முறையிலும் நான் செய்வேன். ஆனால் உளுந்தும் கடலைப்பருப்பும் சம அளவாக போடுவேன். உங்களுடையதும் நன்றாக உள்ளது!
ReplyDeleteகருத்துக்கு நன்றி மனோக்கா.
Deleteஇட்டலிப்பொடி இங்கே இட்லி எங்கே ?
ReplyDeleteஇட்லி உங்க ஊர் கடையில் வாங்கிக்க வேண்டியது தான். வருகைக்கு நன்றி சகோ.
ReplyDeleteசுவையான இட்லி பொடி
ReplyDeleteசிறந்த செய்முறை வழிகாட்டல்
கருத்துக்கு நன்றி சார்.
ReplyDeleteNice mam
ReplyDeletemadam i want garlic podi madam
ReplyDeleteI will publish soon.
ReplyDeleteEven in the same receipe before grind we add dried murungai keerai or karuveppilai to make it more healthy
ReplyDelete