புடவையில் வைத்து தைக்கும் சின்ன கலர் ஜமுக்கியை ரப்பர் பந்தில் வைத்து குண்டூசியால் பந்து முழுவதும் குத்தி அதை டேபிள் மேல் பேப்பர் வெயிட்டாக வைக்கலாம். அல்லது கண்ணாடி அலமாரியிலும் வைக்கலாம். பார்பதற்கு அழகாக இருக்கும்.- சமைப்பதற்க்கு 1/2 மணி நேரம் முன்னதாக அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
- நகைகளில் உள்ள அழுக்கை எடுக்க ஒரு தேக்கரண்டி உப்பை நீரில் கலந்து அதில் நகைகளை போட்டு சிறிது நேரம் ஊற விடவும். பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால் நகைகளில் உள்ள அழுக்குகள் போய் விடும்.
- ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
- முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் 2 சொட்டு வினிகர் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் இருக்கும்.
- எவர்சில்வர் பாத்திரத்தில் இருக்கும் கரையை போக்க கரை இருக்கும் இடத்தில் சிறிது புளி வைத்து தேய்த்து கழுவினால் கறை போய் விடும்.
- முகம் பார்க்கும் கண்ணாடியை பழைய நியூஸ் பேப்பர் கொண்டு துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும்.
- டைல்ஸ்க்கு இடையில் இருக்கும் அழுக்கை போக்க பிளீச்சிங் பவுடர் சிறிது எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி பட்ஸ் கொண்டு அழுக்கு இருக்கும் இடங்களில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்து பிறகு துடைத்தால் பளிச்சென்று ஆகி விடும். டைல்ஸ்சையும் இதே முறையில் சுத்தப்படுத்தலாம்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
- நாம் தினமும் உபயோகிக்கும் பாத்திரங்களை சோப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் பளிசசென்று ஆகி விடும்.
- சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.
- பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும் வரும்.
- வெண்டைக்காயயை பொடிதாக நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் வைத்து பின்னர் பொரியல் செய்தால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி விடும்.
- பூண்டின் தோலை சுலபமாக உரிக்க அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை ஆப் பண்ணி விட்டு தேவையான பூண்டு பற்களை போட்டு கிளறி மூடி வைத்து விடவும். 10 நிமிடம் ஆனதும் எடுத்து உரித்தால் சுலபமாக தோல் வந்து விடும்.
- பிரிஜ்ஜை சுத்தப்படுத்த 1/2 தேக்கரண்டி பற்பசையை எடுத்து தண்ணீரில் கலக்கி மெல்லிய காட்டன் துணியால் துடைத்து பின்னர் வெறும் தண்ணீரில் துடைத்தால் பிரிஜ் பளிச்சென்று ஆகி விடும்.
- ரவா தோசை சுடும் போது மாவில் இரண்டு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நல்ல மொறுகலாக வரும்.
- சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு மேஜைக்கரண்டி தயிரும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
- தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைக் கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு ஊற்றினால் தோசை நன்றாக விரிந்து வரும்.
- ஒரு கைப்பிடி சாதத்தை மிக்ஸ்சியில் அரைத்து இட்லி மாவுடன் கலந்து அவித்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
- காப்பி பில்டரில் அடிப்பாகத்தில் உள்ள துவாரங்கள் அடைத்துக் கொண்டால் காஸ் அடுப்பை ஆன் பண்ணி சிம்மில் வைத்து பில்டரை இடுக்கியால் பிடித்து பர்னருக்கு மேல் காட்டினால் அடைத்துக் கொண்டிருக்கும் தூள்கள் விழுந்து விடும்.
- பிரியாணி சமைப்பதற்கு எப்போதும் புதிதாக அரைத்த இஞ்சி பூண்டு விழுதை உபயோகித்தால் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.
- மோர்க்குழம்பு செய்யும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி குழம்பில் சேர்த்தால் நல்ல வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.
- பால் இளஞ்சூட்டோடு இருக்கும் போது உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக உறையும்.
- ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
- வீட்டில் ஒரு பத்தி ஸ்டாண்ட் அதிகமாக இருந்தால் அதன் துவாரங்களில் சிறிய கலர் பூக்களை வைத்து சாமி படம் முன் வைக்கலாம்.
- மிளகாய் வத்தலை மிக்ஸ்சியில் தூள் செய்யும் போது சிறிது கல் உப்பை சேர்த்து திரித்தால் நன்கு தூளாகி விடும்.
- பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரண்டி கார்ன் ப்ளோர் (சோள மாவு) சேர்த்து செய்தால் பூரி மிருதுவாக இருக்கும்.
- ஆப்பம், இடியாப்பத்திற்க்கு ஊற்றி சாப்பிட எடுக்கும் தேங்காய் பாலுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.
- அரைக் கிலோ ரவையை வாங்கி மொத்தமாக வறுத்து வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி செய்வதற்கு எளிதாக இருக்கும்.
- முட்டை ஆம்லெட் செய்யும் போது முட்டை கலவையுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணைய் சேர்த்து செய்தால் ஆம்லெட் மிருதுவாக இருக்கும்.
- காய்கறி வெட்டும் பலகையிலுள்ள கறையை போக்க ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கறை உள்ள இடங்களில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு கழுவினால் பலகை பளிச்சென்று ஆகிவிடும்.
- ரசம் வைக்கும் போது தேங்காய் தண்ணீரும் சேர்த்து செய்தால் ரசம் நல்ல ருசியாக இருக்கும்.
- வெங்காய வடகத்தை வெறும் கடாயில் போட்டு லேசாக சூடாக்கி விட்டு பிறகு எண்ணெயில் பொரித்தால் நன்றாக பொரிந்து மொறு மொறுப்பாக இருக்கும்.
- ஒரு கப் கோதுமை மாவுக்கு இரண்டு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மாவுடன் சேர்த்து பிசைந்து பூரி செய்தால் நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.
- இடியாப்ப மாவுடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து இடியாப்பம் பிழிந்தால் மிகவும் மென்மையாக இருக்கும்.
வீட்டு/சமையல் குறிப்புகள்
Subscribe to:
Posts (Atom)
gud saratha
ReplyDeleteஅருமையான குறிப்புகள்...
ReplyDeleteநன்றி ஷமி.
DeleteNice tip s
DeleteVery useful One Athai...
ReplyDeleteEach and every tip is useful for us...
Superb Work :-)
Thank you Ponraj.
Deleteமிகவும் உபயோகமான தகவல்கள் ....பகிற்விற்கு நன்றி...வாழ்த்துக்கள்
ReplyDeleteThank you.
ReplyDeleteஅனைத்துமே மிகவும் பயனுள்ள டிப்ஸ். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி பிரியசகி.
ReplyDeleteமிகவும் நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள்,
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சரவணன்.
ReplyDeleteNice information
ReplyDeleteThank you
ReplyDeleteNice tips
ReplyDeleteDear Madam,
ReplyDeleteI m a regular visitor of ur portal and trying ur receipes as I have become a cook recently in our home :-). The dishes are awesome.
By the way, I have a doubt, what is the measurement for teaspoon and tablespoon. If possible show me the spoons by picture. Thanks in advance.
Regards
Amudha
Super tip's
ReplyDeleteThank you
ReplyDelete