பரிமாறும் அளவு _ இரண்டு நபருக்கு
தேவையான பொருள்கள் _
நறுக்கிய கேரட் 1/2 கப்
நறுக்கிய பீன்ஸ் _ 1/2 கப்
அவித்த துவரம் பருப்பு _ 1/4 கப்
நறுக்கிய தக்காளி _ 1
சாம்பார் பொடி _1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள்_ 1/2 தேக்கரண்டி
உப்பு _ தேவையான அளவு
அரைக்க _
தேங்காய் துருவல் _ 1/4 கப்
சின்ன வெங்காயம் 5
தாளிக்க _
கடலை எண்ணெய் _3 மேஜை கரண்டி
கடுகு , உளுந்தம் பருப்பு 1 தேக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம் _1/4 கப்
கருவேப்பிலை_ சிறிது
செய்முறை _
தேங்காய் துருவல், சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் .
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள கேரட் , பீன்ஸ் , தக்காளி சேர்க்கவும் . தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும் . பத்து நிமிடங்களில் வெந்து விடும் .
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்தம் பருப்பு போடவும் கடுகு வெடித்தவுடன் கருவேப்பிலை நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கிளறவும்
வெங்காயம் பொன்னிறமானதும் அவித்து வைத்துள்ள கேரட் ,பீன்ஸ் .தக்காளி சேர்த்து கிளறி அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
மசாலா வடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை சேர்த்து கொதிக்க விடவும். கூட்டு கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும் . சுவையான கேரட் பீன்ஸ் பருப்பு கூட்டு ரெடி
இந்த கூட்டு புளிக்குழம்பு சாதம் , ரசம் சாதம் , தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments:
Post a Comment