Saturday, November 15, 2014

கேரட் சட்னி / Carrot Chutney

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேரட் - 2
  2. சின்ன வெங்காயம் - 10
  3. தக்காளி - 1
  4. மிளகாய் வத்தல் - 2
  5. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  6. காயத்தூள் - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு                          
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கேரட், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும். 
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.                                                   

  3. பிறகு அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட்டை போட்டு இரண்டு நிமிடம் வரை வதக்கி  வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். 
  4. அடுத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும்.

  6. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் வதக்கிய அணைத்து பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.                                                
  7. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான கேரட் சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.                                  

5 comments:

  1. உங்கள் சமையலில் நல்லெண்ணெய் சேர்ப்பது சூப்பர் .. மிகவும் ரசிக்கிறேன் அக்கா ... கேரட் சத்துக்களை சட்னியாக கொடுத்து இருக்கீங்க .அருமை ...

    ReplyDelete
  2. சங்கீதா நீங்கள் ரசித்து பார்ப்பது எனக்கு சந்தோஷம் தான் !!

    ReplyDelete
  3. சூப்பராக இருக்கு பார்க்கும் போதே...கேரட் சட்னி.

    இட்லி சும்மா soft இருக்க்கே...சாப்பிடத்தான் முடியலை.

    பச்சைமிளகாய், தேங்காய் சேர்த்து நாங்கள் செய்வோம். (வரமிளகாயுடன்)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...