பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- நன்கு பழுத்த தக்காளி - 3
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
- நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- தக்காளியை சிறியதாக நறுக்கி வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் அரைத்த கலவை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். 5 நிமிடம் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆற விடவும்.
- ஆறிய பின் தக்காளி கலவையை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கலவையில் ஊற்றவும். சுவையான பச்சடி ரெடி. இது இட்லி, தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment