பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- அரைக்கீரை - 1 கட்டு
- துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக கழுவி பொடிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- துவரம் பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் கீரை மற்றும் பருப்பை சேர்த்து போட்டு கிளறவும்.
- பிறகு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கீரை வேகும் வரை கிளறவும்.
- இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான அரைக்கீரை பொரியல் ரெடி.
seimurai arumai... nanum seithu parkiren
ReplyDeleteYummy poriyal. Will toordal cooks well in kadai.we usually pressure cook the toor dal.
ReplyDelete