Thursday, March 21, 2013

இட்லிப் பொடி / Idly Podi



தேவையான  பொருள்கள் -
  1. தோல் உளுந்து அல்லது முழு உளுந்து - 100 கிராம்
  2. துவரம் பருப்பு - 50 கிராம்
  3. கடலைப் பருப்பு - 50 கிராம்
  4. சீரகம் - 2 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 10
  6. பூண்டு - 10 பல்
  7. கறிவேப்பில்லை - ஒரு கைப்பிடி
  8. உப்பு - 1 1/2 மேஜைக்கரண்டி
  9. எண்ணெய் - 1 தேக்கரண்டி                                                         
செய்முறை -
  1. கடாயை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடானதும் உளுந்தம் பருப்பைப் போட்டு நன்கு சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
  2. வறுத்த உளுந்தம் பருப்பைப் தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. பின்னர் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு ஆகியவற்றைத்  தனித்தனியாக போட்டு நன்கு வறுத்தெடுக்கவும்.சீரகத்தை வறுக்கத் தேவை இல்லை.
  4. கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதே கடாயில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து கொள்ளவும்.
  5. ஆறிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் உப்பையும் சேர்த்து பொடித்து கொள்ளவும்.                     
  6. இட்லிப் பொடி ரெடி. இதை தோசை/இட்லியோடு சேர்த்து சாப்பிடலாம். காற்று புகாத பாட்டிலில் போட்டு ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.

7 comments:

  1. இட்லி பொடியில் சீரகம் சேர்ப்பது இப்ப தான் கேள்விபடுறேன்..என் வலைப்பூ வருகைக்கு மிக்க நன்றி.குறிப்புக்கள் அனைத்தும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. சீரகம் சேர்த்தும் செய்து பாருங்கள் ஆசியா.

      Delete
  2. அம்மா பொடி செஞ்சு பார்த்தேன் சூப்பர்

    ReplyDelete
  3. செய்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி திவ்யா.

    ReplyDelete
  4. செய்து பார்க்கிேறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...