தேவையான பொருள்கள் -
- அரிசி - 100 கிராம்
- தயிர் - 100 மில்லி
- பால் - 100 மில்லி
- மல்லித் தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் அரிசியை நன்றாக கழுவி 250 மில்லி தண்ணீருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- சாதம் நன்றாக ஆறிய பின் தயிர், பால் இரண்டையும் ஊற்றி ஒரு கரண்டியால் மசித்து வைக்கவும். ரொம்ப கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பச்சை மிளகாய் வதங்கியதும் கலந்து வைத்துள்ள தயிர் சாதத்தை சேர்த்து கிளறி, மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும்.
- உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான தயிர்சாதம் ரெடி. ஊறுகாய் அல்லது துவையலுடன் பரிமாறலாம்.