Pages

Wednesday, March 26, 2014

முருங்கைக்கீரை பொரியல் / Drumstick Leaves Stir Fry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முருங்கைக்கீரை - 3 கப் 
  2. துவரம்பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி                               
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. மிளகாய் வத்தல் - 1
  5. பூண்டுப்பல் - 2
  6. பெரிய வெங்காயம் - 1
  7. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1. முருங்கைக்கீரையை தண்ணீரில் அலசி வைக்கவும்.
  2. துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. பூண்டை தோலுரித்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தலை போடவும். வத்தல் நிறம் மாறியதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன்  உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.                 
  5. வெங்காயம் பொன்னிறமானதும் முருங்கைக்கீரையுடன் ஒரு கை தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
  6. தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் துருவல், அவித்து வைத்துள்ள பருப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
  7. சுவையான முருங்கைகீரை பொரியல் ரெடி. சாதத்துடன் பரிமாறலாம்.

No comments:

Post a Comment