Pages

Saturday, November 11, 2017

பருப்பு ரசம் / Paruppu Rasam



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பருப்பு தண்ணீர் - 1/2 கப் (50 கிராம் துவரம் பருப்பை வேக வைத்து அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்)
  2. தக்காளி - 1
  3. புளி - சிறிய கோலி அளவு 
  4. மிளகு - 1 தேக்கரண்டி 
  5. சீரகம் - 1 தேக்கரண்டி 
  6. பூண்டு பற்கள் - 5
  7. மல்லித்தழை - சிறிது 
  8. கறிவேப்பிலை - சிறிது 
  9. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. கடுகு - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
  2.  மிளகு , சீரகம், பூண்டுப்பற்கள் மூன்றையும் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போடவும். பிறகு கடுகு , காயம், வெந்தயம் போடவும். 
  4. கடுகு வெடித்தவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி புளித்தண்ணீரை ஊற்றவும்.
  5. ஒரு கொதி வந்ததும் பருப்பு தண்ணீரை ஊற்றவும். நுரை கூடி வரும் போது கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் உப்பை போட்டு கடாயிலுள்ள ரசத்தை அதனுள் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பருப்பு ரசம் ரெடி.

6 comments:

  1. பருப்பு ரசம் செய்முறை அருமை.
    முயற்சித்துப் பார்க்கிறேன் அம்மா.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி குமார்.

    ReplyDelete
  3. நன்று மகளிடம் செய்ய சொல்கிறேன்

    ReplyDelete
  4. கண்டிப்பாக செய்ய சொல்லுங்கள் சகோ.

    ReplyDelete