Pages

Saturday, January 7, 2017

ஓமப்பொடி / Omapodi


தேவையான பொருள்கள் -
  1. கடலை மாவு - 1 கப் 
  2. பச்சரிசி  மாவு - 1/2 கப் 
  3. ஓமம் - 1 மேஜைக்கரண்டி 
  4. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. ஓமத்தை வெந்நீரில்  2 மணி நேரம் ஊற வைத்து  நீரை வடி கட்டி தனியே வைக்கவும்.
  2. ஊறிய ஊமத்தை  மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் ஓமத்தண்ணீருடன் கரைத்து வடி கட்டிக்கொள்ளவும்.
  3. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் ஓமத் தண்ணீரை சேர்த்து பிசையவும்.
  4. பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து  முறுக்கு குழலில் ஓமப்பொடி அச்சை போட்டு குழல் கொள்ளும் அளவுக்கு மாவை வைத்து பிழியவும்.
  6. ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் பிழிந்து எடுக்கவும்.
  7. பிறகு எல்லாவற்றையும் கையால் நொறுக்கி ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

12 comments:

  1. நான் ரசிப்பது, ருசிப்பது.

    ReplyDelete
  2. ஆஹா எனக்கு பிடித்தது

    ReplyDelete
  3. அருமை. நன்றி அம்மா

    ReplyDelete
  4. என் வீட்டாரின் விருப்பமான உணவு

    ReplyDelete
    Replies
    1. அருமையான வழிகாட்டல்

      Delete
  5. கடலை மாவு எண்ணெய் வகை என்று ஒதுக்கியாகி விட்டது..

    ஆனாலும் மனம் கேட்கின்றதா?..

    எப்போதாவது சிறிதளவு மட்டும்!..

    ReplyDelete
  6. படங்களுடன் விளக்கம்...
    நான் ஊருக்குப் போனா ஒரு கடையில ஓமப்பொடி வாங்கி சாப்பிட மட்டுமே செய்வேன்...

    இதெல்லாம் வீட்டில் செய்வது என்பது... சாத்தியமில்லை...

    ReplyDelete
  7. அம்மாவின் சமையல் பார்த்து
    ரொம்ப நாளாச்சு...
    வலைத்தளம் வர இப்போதான்
    நேரங்கள் கிடைத்ததது...
    அருமை அம்மா செய்முறை விளக்கம்...

    ReplyDelete
  8. வீட்டில்செய்துபார்த்தேன் மிகவும்நன்றாக வந்தது.கடையில்வாங்கியது போன்று அருமையானசுவை.

    ReplyDelete
  9. One cup means how many grams ma?

    ReplyDelete