Pages

Tuesday, November 29, 2016

சாத வடகம் / Rice Vadam


தேவையான பொருள்கள் -
  1. வேக வைத்த சாதம் - 1 கப் 
  2. மிளகாய் வத்தல் - 2
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. காயத் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. வேக வைத்த சாதத்துடன் மிளகாய் வத்தல், காயத் தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். சாதத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  2. தட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் அரைத்து வைத்துள்ள சாதத்தை ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து வட்ட வட்டமாக வைக்கவும்.
  3. பிறகு எல்லா தட்டுகளையும் மொட்டை மாடியில் அல்லது வெயில் வரும் இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும். அடுத்த நாள் வடகத்தை ஒரு சிறிய கரண்டியால்  எடுத்து மாற்றி போட்டு மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
  4.  இப்போது வடகங்கள் நன்கு காய்ந்து விடும். 
  5. காய்ந்த வடகங்களை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவையான போது எடுத்து வறுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு -

  1. மீந்து போன சாதத்திலும் இதே முறையில் வடகம் செய்யலாம்.

7 comments:

  1. எளிமையான செய்முறை..
    அநேகமாக தமிழகத்தில் சோற்று வடகம் எல்லாருக்கும் இஷ்டமானது என்றே நினைக்கின்றேன்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  2. எளிய வழி. இனிய சுவை.

    ReplyDelete
  3. சாதத்தை அரைக்க கூடாது என்று அம்மா சொல்வார்கள் அதனால் நன்றாக கையால் பிசைந்து மிளகாய் தூள், சீரகம் போட்டு செய்து இருக்கிறேன், நீங்கள் சொல்வது போல் மீந்து போன சாதத்தில்.
    படங்களுடன் செய்முறை அருமை.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு மேடம்... சாதத்தை ஏன் அரைக்கக் கூடாது? கடைசி காலங்களில் அம்மா, அப்பா ஆகியோருக்கு சாதத்தை மிக்ஸியில் அரைத்துக் கொடுத்திருக்கிறோம்.

      Delete
  4. படங்களும் செய்முறையும் அருமை சாரதா! நான் மீந்து போன‌ சாதத்தை நொறுங்கப்பிசைந்து கொண்டு அல்லது நீர் விடாமல் மிக்ஸியில் ஒன்று பாதியாய் அடித்துக்கொண்டு பொடியாக அரிந்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, காயம், சீரகம் போட்டுக்கலந்து சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைத்து காய‌ வைப்பது வழக்கம்!

    ReplyDelete
  5. பெருங்காயத் தூள்

    ReplyDelete