Pages

Tuesday, July 19, 2016

பீன்ஸ் பொரியல் / Beans Poriyal


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பீன்ஸ் - 1/4 கிலோ 
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  3. ஆம்சூர் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி  
  3. பெரிய வெங்காயம் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பீன்ஸ், வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி  சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், உப்பு சேர்த்து கிளறவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பீன்ஸ் வேகும் வரை கிளறி விடவும்.
  4. பீன்ஸ் நன்கு வெந்தவுடன் மிளகாய் தூள், ஆம்சூர் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கிளறவும்.

  5. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி.

11 comments:

  1. ஆம்ச்சூர் பொடி சேர்த்து பீன்ஸ் செய்ததில்லை..பார்க்க நல்லா இருக்குங்க பொரியல். செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மகி. ஆம்சூர் பொடி சேர்த்து செய்ததால் சுவை வித்தியாசமாக இருந்தது. செய்து பாருங்கள்.

      Delete
  2. நல்ல செய்முறைக் குறிப்பு

    மாங்காய்ப் பொடி சேர்த்து செய்ததில்லை..
    செய்து விடலாம்..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பாருங்கள் சார். வருகைக்கு நன்றி.

      Delete
  3. ஊருக்கு வந்துதான் செய்யச் சொல்லணும்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி சகோ. நீங்க ஊருக்கு வந்ததும் செய்ய சொல்லி சாப்பிடுங்கள்.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    நலமா? சுவையான பீன்ஸ் பொரியல். தங்களின் செய்முறை படங்களுடன் அருமையாக உள்ளது. சற்றே புளிப்புச் சுவைக்காக ஆம்ச்சூர் பொடியை சேர்த்தீர்களோ? சுவையான தகவல்களுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. வாங்க சகோதரி நான் நலம். வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்தை பார்க்கிறேன். ஆம்சூர் பொடி சேர்த்தால் புளிக்காது. சிறிது வித்தியாசமான சுவையில் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தகவலுக்கு நன்றி.சிறிது காலமாக இணைய குறைபாடு காரணமாக வலைபக்கமே வர இயலவில்லை.அனைவரின் பதிவுகளையும் தவற விடுகிறோமே என்ற வருத்தம் இருந்தது.அதனால்,தாமதமாக வந்து கருத்திடுவதற்கு மன்னிக்கவும் நானும் இப்போதுதான் ஒரு வருடத்திற்கு முன்பு எழுதி டிராப்டில் இருந்த பதிவொன்றை வெளியிட்டுள்ளேன்.தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என் தளம் வந்து சென்றால் மகிழ்ச்சியடைவேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete