Pages

Tuesday, May 3, 2016

இனிப்பு போளி / Sweet Poli

தேவையான பொருட்கள்
  1. மைதா மாவு - 1 கப்  (200 கிராம்)
  2. வெல்லம்  - 3/4 கப் 
  3. கடலை பருப்பு - 3/4 கப்
  4. மஞ்சள் பொடி - 1/4 மேஜைக்கரண்டி
  5. ஏலக்காய் தூள் - 1/4 மேஜைக்கரண்டி 
  6. எண்ணெய் - 5 அல்லது 6 மேஜைக்கரண்டி
  7. உப்பு - 1 சிட்டிகை 
  8. நெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள், 4 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக தளர்வாக பிசைந்து கொள்ளவும். பிறகு 1 மேஜைக்கரண்டி எண்ணெயை மேலே தடவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் கடலைப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது.
  3. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்திருந்து பிறகு அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து வெந்த கடலைபருப்பை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஒரு முழு கடலைப்பருப்பு கூட இல்லாமல் நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் போளி தேய்க்கும் போது மாவை விட்டு வெளியே வரும்.
  4. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
  5. மறுபடி அடுப்பில் கடாயை வைத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லக்கரைசலை ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள், பொடித்து வைத்துள்ள கடலைமாவை சேர்த்து கிளறவும். 
  6. கடலைப்பருப்பு வேக வைக்கும் போதும், வெல்லத்தை கரைக்கும் போதும் அளவான தண்ணீர் சேர்த்திருந்தால் 5 நிமிடங்களில் மாவு கட்டியாக சுருண்டு வந்து விடும். இல்லாவிட்டால் மாவு சுருண்டு வர சிறிது நேரம் எடுக்கும்.
  7. நன்கு ஆறியதும் 10 உருண்டையாக உருட்டி வைக்கவும்.
  8. ஊறிய மைதா மாவை எடுத்து 10 உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வெல்ல உருண்டை பெரியதாகவும், மைதா மாவு உருண்டை சிறியதாகவும் இருக்க வேண்டும்.
  9. சப்பாத்திக்கல்லில் சிறிது மாவை தூவி கொள்ளவும். மைதா உருண்டையை வைத்து சிறிய வட்டமாக தேய்த்து அதன் நடுவில் வெல்ல உருண்டையை வைத்து நன்கு மூடவும்.
  10. பிறகு கட்டையை வைத்து ரொம்ப அழுத்தம் கொடுக்காமல் லேசாக தேய்த்து வட்டமாக விரிக்கவும்.
  11. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானவுடன் போளியை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
  12. இப்போது போளியை சுற்றி ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றவும். இரு புறமும் நன்கு வெந்ததும் போளியை எடுத்து தட்டில் வைக்கவும். சுவையான போளி ரெடி.
  13. மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் செய்யவும். இந்த அளவுக்கு 10 அல்லது 11 போளிகள் வரும்.
குறிப்புகள் -
  1. கடலைப்பருப்பை வேகும் வைக்கும் பொது அதிகமாக தண்ணீர் சேர்த்து விட்டு வேக வைத்திருந்தால் மிக்சியில் பொடிக்க கடினமாக இருக்கும். அதற்கு பதிலாக ஒரு மத்தை வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். 
  2. அதிக தண்ணீரால் மாவு சுருண்டு வர நேரம் எடுத்தால் பொட்டு கடலையை பொடித்து அதை 4 அல்லது 5 மேஜைக்கரண்டி சேர்த்துக் கொண்டால் சீக்கிரமாக மாவு பதத்திற்கு வந்து விடும். 

21 comments:

  1. இனிப்பு போளி தோசை மாதிரியே இருக்கின்றது.

    ReplyDelete
  2. உடன் வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. அந்த ப்ளேட்ல இருக்குற அத்தனை போளியும் எனக்கு தான்.

    பார்க்கவே நன்றாக உள்ளது. கடையில் வாங்கி தான் சாப்பிட்டுருக்கிறேன். உங்கள் முறையில் வீட்டில் செய்து பார்க்கிறேன் மா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷமீ.

      Delete
  4. ஆஹா....
    படிக்கும்போதே ருசி அள்ளுது...
    செய்து சாப்பிட்டு பார்க்கிறேன் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. செய்து சாப்பிடுங்கள் அஜய்.

      Delete
  5. வணக்கம்
    அம்மா

    சுவையான உணவு பற்றி சிறப்பான செய்முறை விளக்கம் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.

    ReplyDelete
  7. இனிப்பு போளி.. அதன் சுவையும் மணமும் தனி..

    தஞ்சாவூர் கீழவாசலில் பெரியவர் ஒருவர் - பலகாலமாக தயாரித்து விற்கும் போளி இன்னும் நெஞ்சில் தித்தித்து இருக்கின்றது..

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  8. இனிப்பு போளி ரொம்ப பிடிக்கும் மா.. ஆனால் தேங்காய் போளி தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. இங்கே மஞ்சள் பொடி சேர்க்காமல் செய்வாங்க.. நல்லாயிருக்கு.. முடியும் போது செய்து பார்க்கிறேன் மா..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி அபி.

      Delete
  9. சாப்பிட ஆசையா இருக்கு....சூப்பர்....
    எப்பவாவது தான் செய்வது...

    ReplyDelete
  10. எடுத்து கொள்ளுங்கள் சகோ. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. போளி சூப்பர்மா,, ஆனால் செய்யனும் என்றால் பயமா இருக்கு சரியா வருமா?,,

    ReplyDelete
  12. பயம் தேவை இல்லை. சரியாக வரும் மகேஸ்வரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. போளி எனக்கு மிகவும் பிடிக்கும். போளி செய்யும் முறையை குறித்துக் கொண்டேன்

    ReplyDelete
  14. போலி தயாரிப்பு விதம் அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. வெகுநாட்களுக்குப் பிறகு வந்தேன், ரசித்தேன். அருமை.

    ReplyDelete
  16. நான் தேங்காய் போட்டு செய்திருக்கேன். உங்க ரெசிப்பியையும் செய்துபார்க்கிறேன் அக்கா. நன்றி.

    ReplyDelete
  17. அருமையான சிமுரை விளக்கம். நன்றி.

    ReplyDelete