Pages

Friday, February 26, 2016

சுரைக்காய் அடை / Bottle Gourd Adai

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 200 கிராம் 
  2. துவரம் பருப்பு - 50 கிராம் 
  3. கடலைப்பருப்பு - 50 கிராம் 
  4. பாசிப்பருப்பு - 50 கிராம் 
  5. சுரைக்காய் - 100 கிராம் 
  6. சின்ன வெங்காயம் - 50 கிராம் 
  7. மிளகாய் வத்தல் - 4
  8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
  9. காயத்தூள் - சிறிது 
  10. நல்லெண்ணெய் - தேவையான அளவு
  11. கறிவேப்பிலை - சிறிது 
  12. மல்லித்தழை - சிறிது 
  13. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. இட்லி அரிசி, பருப்பு வகைகள் இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. சுரைக்காய், கறிவேப்பிலை, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி  வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3.  ஊறிய பிறகு அரிசி, மிளகாய் வத்தல் மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.
       
  4. பிறகு அதனுடன் பருப்பு வகைகள், மஞ்சள் தூள், காயத்தூள், சுரைக்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  5. பிறகு அதனுடன் மல்லித்தழை, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
  6. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக நல்லெண்ணெய் தடவவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி பரப்பவும். சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும். 
  7. ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும். மீதமுள்ள மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான அடை ரெடி. தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சேர்த்து பரிமாறலாம். 
     

19 comments:

  1. ஆஹா எவ்வளவு அழகாக இருக்கின்றது அடை அட....

    ReplyDelete
  2. வணக்கம்

    சுவையான உணவு செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ரூபன்.

      Delete
  3. சுரைக்காய் அடை எனக்கு புதிது.. ரொம்ப நல்லா இருக்கு அம்மா...

    ReplyDelete
    Replies
    1. செய்து பாரு அபி நன்றாக இருக்கும்.

      Delete
  4. சுவையான மாலை சிற்றுண்டி..
    அருமை..

    ReplyDelete
  5. வாசமான அடை பிரமாதம்...

    ReplyDelete
  6. ஆஹா.... சுரைக்காய் அடை....
    பார்க்கும் போதே அவ்வளவு அழகா இருக்கே...
    சுவையில் சாச்சிடுமோ...

    ReplyDelete
  7. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி குமார்.

    ReplyDelete
  8. புதிதாக இருக்கு... செய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி...

    ReplyDelete
  9. சுவையான அடை! படங்களுடன் செய்முறை விளக்கம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  10. கருத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  11. ஆஹா அம்மா நான் இதெல்லால்
    தின்றதே இல்லை ...
    முயன்று பார்க்கிறேன் அம்மா...

    ReplyDelete
  12. முயற்சி செய்து பாருங்கள் அஜய்.

    ReplyDelete