Pages

Friday, September 4, 2015

வாழைத்தண்டு பொரியல் / Vazhaithandu Poriyal / Plantain Stem Stir Fry

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. வாழைத்தண்டை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கலாம். இனி வாழைத்தண்டு பொரியல் எப்படி செய்வதென்று பார்ப்போம்!
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வாழைத்தண்டு - 1 துண்டு 
  2. பாசிப் பருப்பு - 4 மேஜைக்கரண்டி 
  3. மோர் - 100 மில்லி 
  4. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாசிப் பருப்பை குழைய விடாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  2. வாழைத்தண்டை வட்ட வட்டமாக வெட்டி அதிலுள்ள நார்களை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி மோரில் போட்டு வைக்கவும். அப்போது தான் கறுத்து  போகாமல் இருக்கும்.
  3. வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் மோரில் ஊற வைத்திருக்கும்  வாழைத்தண்டுகளை எடுத்து  போட்டு கிளறவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி அதோடு ஒரு கை அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
  6. நன்றாக வெந்து நீரும் வற்றியதும் அவித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி.

17 comments:

  1. வாழைத்தண்டு செய்ததில்லை அம்மா கிடைத்தால் செய்து பார்க்கிறேன். வாழைக்காய், வாழைத்தண்டு அடுத்து என்ன அம்மா வாழைப் பூவா?
    பகிர்வுக்கு நன்றி - அபி

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் அபிநயா.

      Delete
  2. உங்க வீட்டு அபி எப்படி இருக்கார் அம்மா இந்த வருடம் விடுமுறைக்கு வருகிறாரா?

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டு அபி நன்றாக இருக்கிறார். இந்த வருடம் விடுமுறையில் அபி கண்டிப்பாக வருவார். அபி பற்றி விசாரித்தமைக்கு நன்றி.

      Delete
  3. எனக்கு மிகவும் பிடித்தமானது எனது அம்மா செய்வார்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகை கண்டு மகிழ்ச்சி சகோ.

      Delete
  4. உடலுக்கு நலம் சேர்க்கும் வாழைத் தண்டு சமையல்..

    அருமை.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. கருத்து க்கு நன்றி சார்.

      Delete
  5. வாழைத்தண்டு உடலுக்கு மிக முக்கியமானது. புகைப்படம் அருமை. நன்றி.

    ReplyDelete
  6. நல்லதொரு குறிப்பு! புகைப்படமும் அழகு!

    ReplyDelete
  7. எனக்கு ரொம்பப் பிடிக்கும் அம்மா...

    ReplyDelete
  8. வருகை கண்டு மகிழ்ச்சி குமார்.

    ReplyDelete
  9. அருமையான எளிய செயல் முறைவிளக்கம். நன்றிமா

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி மகேஸ்வரி.

    ReplyDelete
  11. 2,3 பதிவு விட்டுவிட்டேன் அக்கா. மன்னிக்க. வாழைத்தண்டு பொரியல் ஊரில் சாப்பிட்டதோடு சரி.இங்கு கிடைக்காது. கிடைத்தால் செய்திடலாம் உங்க குறிப்பின் படி. எளிமையான குறிப்பு.

    ReplyDelete