Pages

Sunday, August 2, 2015

காலம் பொன்னானது / Time is Gold


காலத்தின் அருமையை  நாம் எவ்வாறு உணர்ந்து  செயல் படுகிறோம் என்பது பற்றி ஒரு சிறிய பதிவு உங்கள் அணைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் அனைவருக்கும் கல்வி, செல்வம், வீரம், ஆரோக்கியம் எல்லாவற்றிலும் வேறுபாடு இருக்கும். ஆனால் காலம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.

 காலம் பொன்னானது கடமை கண் போன்றது என்ற பழமொழியும் உண்டு. காலத்தின் அருமையை  உணர்ந்து நாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள்  இளமைப்பருவத்தில் தொலைத்த கல்வியை முதுமை பருவத்தில் தேடுவது மிகவும் கடினமாகும். எனவே மாணவர்கள் காலத்தின் அருமையை உணர்ந்து சரியான நேரத்தில் கல்வி கற்க வேண்டும்.

நேரத்தை வீணாக்குவது, சோம்பல் படுவது, நேரத்தை தள்ளி போடுவது போன்றவற்றை தவிர்க்க பழகி கொள்ள வேண்டும். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளி போடாமல் இன்றே செய்து முடிக்க பழகி கொள்ள வேண்டும்.

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்திஜி காலம் நேரம் பார்க்காமல் நாட்டின் சுதந்ததிரத்துக்காக அயராது பாடு பட்டர். எளிமையை விரும்பிய அவரே நேரத்தை திட்டமிட்டு செயல் பட வேண்டும் என்று நினைத்து அந்த காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட கைக்கடிகாரத்தை இடுப்பில் கட்டி இருந்தார்.

                                                                            

இப்போது பெண்கள்  சுலபமாக வேலை செய்வதற்கு காஸ் ஸ்டவ், குக்கர், மிக்ஸ்சி, கிரைண்டர் என்று வந்த படியால் நேரத்தை நிறைய மிச்சப்படுத்தலாம்.

அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கும் கணினி, தகவல் தொடர்புக்கு இ மெயில் போன்றவை வந்து விட்ட படியால் நேரம் நிறைய மிச்சமாகிறது. இது போல பல பொருள்கள் நமது நேரத்தை மிச்சப்படுத்தும் போது நாம் நமது நேரத்தை சரியாக நிர்வாகம் செய்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்.

சில நேரங்களில் நாம் வைத்த பொருள்களை நாமே தேடும் நிலைமையும் உருவாகும். இதனால் நமது நேரம் தான் வீணாகிறது. எனவே எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் வைத்து எடுக்க பழகி கொள்ள வேண்டும்.

நாம் தினமும் செய்யும் வேலைகளுக்கு, குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, தொழிலுக்கு என்று நேரத்தை பகிர்ந்து காலத்தை  உணர்ந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ பழகி கொள்வோம்.

நன்றி
சாரதா

13 comments:

  1. வணக்கம்மா,
    காலத்தின் அருமை, தங்கள் பகிர்வு அருமை,
    வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி.

      Delete
  2. சரியாகச் சொன்னீர்கள் அருமை அருமை !

    ReplyDelete
  3. நல்ல கருத்துள்ள பதிவு!..

    ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்!.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

      Delete
  4. அருமையான கருத்தை பகிர்ந்தமைக்கு வாழ்த்துகளோடு நன்றியும் சகோ.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.

      Delete
  5. காலத்தைப் பற்றிய அழகான, பயனுள்ள பதிவு. முடிந்தவரை நான் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டிருக்கின்றேன். அந்நிலையில் எனக்குத் திருப்தியே.

    ReplyDelete

  6. நீங்கள் நேரத்தை நல்ல முறையில் பயன் படுத்துவது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. காலத்தின் அருமை உணர்த்தும் அருமையான பகிர்வு

    ReplyDelete