Pages

Monday, July 13, 2015

சிக்கன் குழம்பு / Chicken Gravy with Coconut milk


பரிமாறும் அளவு - 3

தேவையன பொருட்கள் -
  1. எலும்புடன் உள்ள சிக்கன் - 1/4 கிலோ
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  6. கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி 
  7. சீரக பொடி - 1 மேஜைக்கரண்டி 
  8. ஆச்சி சிக்கன் மசாலா பொடி - 1 மேஜைக்கரண்டி 
  9. தேங்காய் பால் - 250 ml
  10. உப்பு - தேவைக்கேற்ப 
  11. கொத்தமல்லி தழை - சிறிது
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1
  3. கிராம்பு - 2
  4. கறிவேப்பில்லை - சிறிது 
சிக்கனை ஊற வைக்க -
  1. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  2. மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  3. உப்பு - தேவைக்கேற்ப 
செய்முறை -
  1. சிக்கனை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
  3. பிறகு வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  4. பிறகு ஊற வைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு மற்றும் அணைத்து மசாலா பொடிகளை போட்டு வதக்கவும்.
  5. 5 - 10 நிமிடம் வரை நன்றாக கிளறவும். பிறகு 50 ml தண்ணீர் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி விட்டு மூடி போட்டு வெயிட் வைக்கவும்.
  6. 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும் மூடியை திறந்து மறுபடி அடுப்பை ஆன் செய்யவும்.
  7. கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் பாலை சேர்க்கவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கிளறி கொதிக்க விட்டு 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
  8. கொத்தமல்லி தழையை சேர்க்கவும். சுவையான சிக்கன் குழம்பு ரெடி. இது சாதம், பரோட்டா, சப்பாத்தி, ஆப்பம், இட்லி, தோசை அணைத்துக்கும் நன்றாக இருக்கும்.

19 comments:

  1. வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகை கண்டு மகிழ்ச்சி சார்.

      Delete
  2. வணக்கம்,
    எளிய செயல்முறை விளக்கம், செய்து பார்க்கலாம், ஆனால் சிக்கன் சாப்பிடக் கூடாது என்பதால்,,,,,
    ஆனா எனக்கு சிக்கன் தான் பிடிக்கும்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எப்போதாவது சாப்பிடலாம் அல்லவா ? செய்து பாருங்கள் மகேஸ்வரி.

      Delete
  3. கோழியின் குடும்பம் வாழட்டும் என விலகி விட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மேலே இருக்கும் வார்த்தைகளைப் பார்த்து இப்படி சொல்லலாமா?
      நன்றி.

      Delete
  4. சிக்கன் குழம்பு செயல்முறை விளக்கம்
    சுவைபட தந்தமைக்கு நன்றி சகோதரி!
    தங்கள் குறிப்பின்படி விரைவில் மணக்கும்
    .
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. \, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  5. எளிதான முறையில் அழகாகா சொல்லிவிட்டீர்கள்.நன்றி வாழத்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.

      Delete
  6. ருசித்து பார்த்து சொன்ன கருத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. இந்த முறையில் செய்து பார்க்கணும் அம்மா....

    ReplyDelete
  8. கண்டிப்பாக வீட்டில் செய்ய சொல்லுங்கள் குமார்.

    ReplyDelete
  9. வணக்கம்
    வித விதமாக சாப்பாடு சாப்பிடுவதாக இருந்தால் இந்திய வரும் போது அம்மா வீட்டுக்கு வந்து போகனும் போல உள்ளது.. ஏன் என்றால் பல சுவையான உணவுகளை சாப்பிடலாம்...ஹா..ஹா..ஹா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete