Pages

Wednesday, April 8, 2015

சிறுகிழங்கு பொரியல் / Sirukilangu Poriyal


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிறுகிழங்கு - 300 கிராம் 
  2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு                                          
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. குக்கரில் சிறுகிழங்கு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.                               
  2. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
  3. ஆறிய பிறகு தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.       
                                                                          
  4. பிறகு அதன் மேல் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
                                                            
  5. வெங்காயத்தை பொடிதாக வெட்டி வைக்கவும்.
                                                                          
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                                                            
  7. வெங்காயம் பொன்னிறமானதும் கலந்து வைத்துள்ள சிறுகிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
                                                                            
  8. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.         
                                                                                     
  9. பிறகு வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான சிறுகிழங்கு பொரியல் ரெடி.

29 comments:

  1. கிழங்கு பொரியல் சுவையோ சுவை.

    ReplyDelete
  2. முதல் வருகையாக வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் வரமுடியலை நானாவது வருகிறேன்.

      Delete
    2. நானும் உங்கள் தளத்திற்கு வந்து கருத்து சொல்லி விட்டேன் சகோ.

      Delete
    3. Ama Siru kilagu entral Enna ply

      Delete
  3. வணக்கம்

    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  4. மிகவும் பிடிக்கும்... உங்களின் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
    Replies

    1. வாங்க தனபாலன் கண்டிப்பாக செய்து பாருங்கள்.

      Delete
  5. சிறு கிழங்கு எது என்றே எனக்கு தெரியல, நான் தஞ்சாவூர், பெயர் தெரிந்தால் செய்து பார்க்க வசதியாக இருக்கும். தங்கள் செய்முறை வளிக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இப்போது சிறுகிழங்கு சீசன் தஞ்சாவூரில் ஈஸியாக கிடைக்கும். வாங்கி செய்து பாருங்கள்.

      Delete
    2. எது சிறுகிழங்கு தெரியலம்மா?

      Delete
  6. வணக்கம் சகோதரி.!

    நல்ல அருமையான படங்களுடன் செய்முறை விளக்கங்களுமாய், சிறு கிழங்கு பொரியல் சுவையாக இருந்தது. நான் வெங்காயம் சேர்க்காமல் செய்திருக்கிறேன். ஆனால் தங்கள் பக்குவம் நன்றாக உள்ளது. அதன்படி இனி செய்து பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. சிறிது தாமதமாக வந்தாலும் கருத்து மிக அருமை.

    ReplyDelete
  8. அதானே.. நானும் தஞ்சாவூர் தான்!..
    (உனக்கும் என்னா..ன்னு தெரியலை தானே!..)

    சிறு கிழங்கு..ன்னா என்னான்னு தெரியலையே!?..
    சேப்பங்கிழங்கா.. சேனைக் கிழங்கா இருக்குமோ!..

    பாளையங்கோட்டைக் காரங்க படம் போடறதுக்குள்ளே - பவர்கட் ஆகி விட்டதாம்!..

    அப்போ - பார்த்தால் பசி தீரும் !.. ஆகா.. அருமை.. எப்படியும் தேடிப் பிடித்து வாங்கி - செய்து விட வேண்டியது தான்!..

    ReplyDelete
  9. சாரதா அம்மா சிறு கிழங்கு பொரியல் சூப்பர்...

    ReplyDelete
  10. சிறு கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்,ஆனா எண்ணெயில் பொரித்து தான் சாப்பிட்டிருக்கிறேன்,வெங்காயம் சேர்த்து செய்ததில்லை தங்கள் செய்முறைப்படி செய்து பார்க்கிறேன் ...நன்றி..

    வாழ்க வளமுடன்....

    ReplyDelete
  11. அன்பு சகோதரி.!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்தை பெற்றுக்கொண்டேன் சகோ. மிக்க நன்றி.

      Delete
  12. வணக்கம் சகோதரி.!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      Delete
  13. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார் !

      Delete

  14. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    வாழ்க வளமுடன்......

    ReplyDelete
  15. வாழ்த்துக்கு மிக்க நன்றி சரிதா !

    ReplyDelete