Pages

Sunday, March 1, 2015

பக்கோடா குழம்பு / Pakkoda Kuzambhu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பக்கோடா - 100 கிராம் 
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு                                                                 
லேசாக வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 3
  2. கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. பட்டை - 1 இன்ச் அளவு 
  5. கிராம்பு - 2
                                                                  
அரைக்க - 
  1. தேங்காய் துருவல்  - 50 கிராம் 
  2. தக்காளி - 1
  3. மல்லித்தழை - சிறிது 
                                                                          

தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1/2 இன்ச் அளவு 
  3. கிராம்பு  - 1
  4. வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், பட்டை, கிராம்பு  எல்லாவற்றையும் போட்டு சூடானவுடன் அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
                                                                                                                        
  3. தேங்காய், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். 
  5. வெங்காயம் பொன்னிறமானதும் திரித்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி அதோடு ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். 
                                                                   
  6. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். 
  7. குழம்பு சிறிது ஆறியவுடன் பக்கோடா துண்டுகளை சேர்க்கவும். உடனே கலக்க வேண்டாம். குழம்பு சூடாக இருக்கும் போது பக்கோடாவை போட்டால் பக்கோடா கரைந்து விடும். பக்கோடாவை குழம்பில் சேர்த்து உடனே கலக்கி விட்டாலும் பக்கோடா கரைந்து விடும்.
  8. லேசாக கடாயை ஆட்டி விட்டு பக்கோடாவை குழம்பில் ஊற விடவும். பிறகு பரிமாறவும். சுவையான பக்கோடா குழம்பு ரெடி.                      
மெது பக்கோடா ரெசிபி பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.     

14 comments:

  1. ஆஹா...சூப்பரான பக்கோடா குழம்பு அசத்தல் சகோ

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  3. பக்கோடாவில் குழம்பா ? புதுமையாக இருக்கே....

    ReplyDelete
  4. பக்கோடா குழம்பு தான். இதே முறையில் செய்து பார்த்து கருத்தை சொல்லுங்கள் சகோ.

    ReplyDelete
  5. பக்கோடா!...
    தின்றதுண்டு..
    பக்கோடாவில் குழம்பு என்பது புதுமை.. அருமை!..

    ReplyDelete
  6. தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. "பக்கோடா குழம்பு" வாசம் நிச்சயம் பேசும்!
    உண்ட கைகளின் வாசம் நுகர்ந்தால்
    ஆஹா அருமை என்று!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் சகோ.

      Delete
  8. பக்கோடா குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்குது.

    ReplyDelete
  9. samee கண்டிப்பாக செய்து பாருங்கள்.

    ReplyDelete
  10. பகோடா குழம்பு பார்க்க நன்றாக இருக்கிறது! உங்கள் மசாலா வித்தியாசமாக இருக்கிறது!

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

    ReplyDelete
  12. pokada kuzhambu is new one to me. looks yummy. pakoda is a tasty snack,with that kuzhambu will be awesome.

    ReplyDelete
  13. எனக்கு இந்த நளபாகம் கொஞ்ச தூரம். இருப்பினும் இந்த பக்கோடா குழம்பு என்னை காப்பாற்றும் என்று நினைக்கிறேன். எளிமையாக இருப்பது போல் உள்ளது. நாளை உங்கள் ஆண்டுவிழாவில் எனக்கு கிடைத்தது பாராட்டா? என்ன இருந்தாலும் நான் சொதப்பாம செய்யனும், என் அவர் பாராட்டனும். பார்ப்போம். ஆரம்பித்துவிட்டேன் செய்ய,,,

    ReplyDelete