Pages

Wednesday, March 11, 2015

காலிபிளவர் மிளகு பொரியல் / Cauliflower Pepper Fry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -                                                               
  1. காலிபிளவர் - 1  
  2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. மிளகுத்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு    
  7. மல்லித்தழை - சிறிது                                                                                            
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் - 2
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. காலிபிளவரை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விடவும். பிறகு சிறிய பூக்களாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.                                                                    
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                                                           
  3. வெங்காயம் பொன்னிறமானதும் காலிபிளவருடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒரு கை தண்ணீரும் சேர்த்து காலிபிளவர் வேகும் வரை நன்கு கிளறி விடவும். 
                                                                               
  4. காலிபிளவர் வெந்ததும் மிளகாய் தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து எல்லா இடங்களிலும் படுமாறு நன்கு கிளறவும்.
                                                                            
  5. இறுதியில் மல்லித்தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான காலிபிளவர் மிளகு ரோஸ்ட் ரெடி. 

24 comments:

  1. ஆஹா முதல் படத்தை பார்க்கும்போதே நாவில் எச்சி ஊறுகிறதே,,,,,, ஸூப்பர்.

    ReplyDelete
  2. வாங்க சகோ முதல் வருகையாக வந்திருப்பதால் எடுத்து சாப்பிட்டிருக்கலாமே !

    ReplyDelete
  3. வணக்கம்
    அம்மா
    காலி பிளவரை வேண்டிபல தடவை சமைத்திருக்கோம் இருந்தாலும் தாங்கள் சொல்லிய விளக்கம் செய்முறை ஒரு வித்தியாசம்... அசத்தி விட்டீங்கள்.. செய்முறை விளக்கப்படி செய்து பார்க்கிறோம்.... பகிர்வுக்கு நன்றி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies

    1. வாங்க ரூபன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இதே முறையில் கண்டிப்பாக செய்து பாருங்கள்.

      Delete
  4. இங்கே - நான் சமைக்கும் போது - இந்த Tomato Sauce சேர்ப்பதில்லை..
    அடுத்தமுறை செய்து பார்த்திட வேண்டியதுதான்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார். கண்டிப்பாக செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும்.

    ReplyDelete
  6. "காலிபிளவர் மிளகு பொரியல்"
    (Cஔலிfலொநெர் Pஎப்பெர் Fர்ய்)
    சுவை மிகும் புதிய வகை ரோஸ்ட்
    செயல் முறை விளக்கமும்,
    பகிர்ந்தளித்த விதமும் மிக மிக அருமை!
    தொடருங்கள் சகோதரி!


    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  7. சாப்பிட ஆவலை தூண்டுகிறது.வீட்டில் செய்யச்சொல்ல வேண்டும். பகிர்விற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

      Delete
  8. காலி ப்ளவர் மிளகு பொரியல் புதுசா இருக்கே..
    செய்து பார்க்கிறேன்...
    தங்கள் செய்முறையில் ஒரு கை தண்ணீர் விட சொல்லியுள்ளீர்கள்,அது போதுமா ப்ளவர் வேக ???

    தங்கள் பகிர்வுக்கு நன்றி ....
    வாழ்க வளமுடன்....

    ReplyDelete
    Replies
    1. ஒரு கை தண்ணீர் போதும். இதே முறையில் செய்து பாருங்கள்.

      Delete
  9. காளி ப்ளவர் மிளகு பொறியல் தனியாவும், சாஸ் சேர்ப்பது தனியான பொறியலாகவும் செய்வேன். சற்று வேறு முறை. உங்க முறைப்படியும் செய்திட வேண்டியது தான் சகோ. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பாருங்கள் சகோ.

      Delete
  10. நேற்று செய்து பார்த்தோம்... நன்றி...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகையிலே செய்து பார்த்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சார். தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete
  11. செய்து பார்க்கிறேன். சுடுதண்ணீர் போட வேண்டும் இல்லையா?

    ReplyDelete
  12. முதலில் 5 நிமிடம் சுடு தண்ணீரில் வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் அதை நீங்கள் கவனிக்க வில்லையா ? கண்டிப்பாக செய்து பாருங்கள்.

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி.!

    காலிஃபிளவர் மிளகு பொரியல் அருமை.! பார்க்கும் போதே சாப்பிட சொல்கிறது

    படங்களுடன் செய்முறை விளக்கங்களும் நன்றாக உள்ளது. தங்கள் பாணியில் செய்து பார்க்கிறேன். காலிஃபிளவரில் புழு இருக்குமென்பதால் அதிகம் பயன்படுத்துவதில்லை.! (வென்னீரில் கழுவி பயன்படுத்தலாம்) இனி செய்து பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    தாமதத்திற்கு வருந்துகிறேன். என் பதிவாக "குரு தட்சனை" படித்தால் புரியும்... வந்து படித்து கருத்திட்டால் மகிழ்வடைவேன். நன்றி..!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. கண்டிப்பாக செய்து பாருங்கள் சகோ. உங்கள் பக்கத்திற்கு வந்து கருத்து சொல்லிவிட்டேன்.

    ReplyDelete