Pages

Friday, December 12, 2014

கேரட் கூட்டு / Carrot Kootu

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேரட் - 2
  2. துவரம்  பருப்பு - 50 கிராம் 
  3. சாம்பார்  பொடி - 2 மேஜைக்கரண்டி 
  4. காயத் தூள் - 1/4 தேக்கரண்டி 
  5. மஞ்சள்  தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 

அரைக்க -
  1. தேங்காய்  துருவல் - 1/4 கப் 
  2. தக்காளி - 1 
  3. சின்ன வெங்காயம் - 5
                                                                                     
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். துவரம் பருப்புடன் காயம் சேர்த்து  குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.  தேங்காய் துருவல், தக்காளி, வெங்காயம் மூன்றையும் மிக்ஸ்சியில்  அரைத்துக்  கொள்ளவும்.                                                     

  2. அடுப்பில் கடாயை வைத்து கேரட் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  வேக விடவும். கேரட் வெந்ததும் அதனுடன் உப்பு,மற்றும் சாம்பார் பொடி  சேர்த்து கொதிக்க விடவும்.                                                                                                                         

  3. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய கலவை, மற்றும் அவித்து வைத்துள்ள பருப்பு இரண்டையும் சேர்த்து  5 நிமிடம்  கொதிக்க விடவும்.                                     
  4.  தண்ணீர் தேவைப் பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும். கூட்டு கெட்டியானதும் உப்பு சரி பார்த்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.        
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம்  பொன்னிறமானதும் எடுத்து கூட்டில் சேர்த்து கலக்கி விடவும். சுவையான கேரட் கூட்டு  ரெடி.

3 comments:

  1. காரட் கூட்டு செய்வேன்,ஆனால் தேங்காய் அரைத்து விட்டு செய்ததில்லை,நானும் செய்து பார்க்கிறேன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. Happy new year madam.expecting more recipes from you.

    ReplyDelete