Pages

Tuesday, November 4, 2014

வெங்காய குருமா / Onion kurma

                           
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 2
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. கறிமசாலாத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. கறிவேப்பிலை - சிறிது 
  9. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி                 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. முந்திரிப்பருப்பு - 4
  3. ஏலக்காய் - 2
செய்முறை -
  1. முதலில் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் எல்லாவற்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                                                                    

  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கறிமசாலாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
  4. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குருமா கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான வெங்காய குருமா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.        

10 comments:

  1. ரொம்ப எளிமையா இருக்கு.... நிச்சயம் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் ...செய்து பார்கிறேன்

    ReplyDelete
  2. மிகவும் எளிமையான,வித்தியாசமான ரெசிபி ...
    அடிக்கடி கைகொடுக்கும் இந்த ரெசிபியை பகிர்ந்தமைக்கு நன்றி...

    வாழ்க வளமுடன் ..

    ReplyDelete
  3. A new & delicious kurma..............must try recipe.
    www.shobhapink.blogspot.in

    ReplyDelete
  4. சப்பாத்திக்கு கண்டிப்பா இந்த குருமாவ இன்றே செய்து பார்க்க இருக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  5. செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.

    ReplyDelete