Pages

Monday, September 8, 2014

முட்டை தொக்கு / Muttai thokku

 பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 4
  2. தக்காளி - 2
  3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 1
  4. பெரிய வெங்காயம் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் முட்டைகளை வேக வைத்து கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  4. பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  5. தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். 
  6. அதனுடன் உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாடை நன்றாக அடங்கி கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
  7. வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக கட் செய்யவும் அல்லது நடுவே கீறி கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டைகளை சேர்க்கவும்.
  8. 5 நிமிடம் கழித்து மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை தொக்கு ரெடி. சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

No comments:

Post a Comment