Tuesday, July 29, 2014

மைசூர் ரசம் / Mysore Rasam

 பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 50 கிராம் 
  2. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  3. புளி - சிறிது 
  4. தக்காளி - 1
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. பூண்டுப்பல் - 5
  7. உப்பு - தேவையான அளவு 
  8. கறிவேப்பிலை - சிறிது 
  9. மல்லி இலை - சிறிது  
  10. எண்ணெய் - 1 தேக்கரண்டி                    
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 1
  2. கொத்தமல்லி - 1 தேக்கரண்டி 
  3. மிளகு - 1 தேக்கரண்டி 
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
தாளிக்க -
  1. நெய் - 1 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. முதலில் புளியை 300 மில்லி தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  2. பருப்பை நன்றாக கழுவி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு  சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல், பூண்டுபல் எல்லாவற்றையும் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.
  4. சீரகத்தை வறுத்த பொருள்களோடு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  5. தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணைய்  ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் கரகரப்பாக அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. புளியின் பச்சை வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை நன்கு மசித்து சேர்க்கவும். பிறகு மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து ரசத்தில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான மைசூர் ரசம் ரெடி.

3 comments:

  1. மஸூர் பருப்பில் இருந்து செய்யப்படுவது மஸூர் ரசம்

    ReplyDelete
  2. Dinesh kumar toronto canadaFebruary 27, 2017 at 3:14 AM

    We say it as paruppu rasam

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...