Friday, January 24, 2014

வெஜிட்டபிள் பிரியாணி / Vegetable Briyani

                                                               
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பிரியாணி அரிசி - 150 கிராம் 
  2. உருளைக்கிழங்கு - 1
  3. கேரட் - 1
  4. காய்ந்த பட்டாணி - 50 கிராம்
  5. பெரிய வெங்காயம் - 3
  6. பச்சை மிளகாய் -1
  7. தக்காளி - 1
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  9. பட்டை கிராம்பு பொடி  - 1 தேக்கரண்டி 
  10. மல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு 
  11. புதினா - ஒரு கைப்பிடி அளவு  
  12. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  13. பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி 
  14. தயிர் - 2 மேஜைக்கரண்டி 
  15. உப்பு - தேவையான அளவு                       
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - 1 இன்ச் அளவு 
  4. கிராம்பு - 2
  5. பிரிஞ்சி இலை - 1                                   
                          
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் - 100 கிராம்                                   
செய்முறை -
  1. பட்டாணியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி மூன்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
  3. தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்து 300 மில்லி அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
  4. அரிசியுடன் தேங்காய் பாலை சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி சூடானவுடன்  பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.                                                             
  6. வெங்காயம் பொன்னிறமானதும்  பட்டை கிராம்பு பொடி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும்.  
                                      
  7. தக்காளி நன்கு வதங்கியதும்  மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
  8. பிறகு கேரட், ஊற வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  9. அதோடு தயிர், மிளகாய்தூள், பிரியாணி மசாலா சேர்த்து 1 நிமிடம் கிளறவும். 
  10. பிறகு தேங்காய் பாலில் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கலக்கி மூடி வைக்கவும்.
  11. நீராவி வந்ததும் வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து  ஆப் பண்ணி விடவும்.                                                          
  12. விசில் வர தேவை இல்லை. நீராவி அடங்கியதும் குக்கரை திறந்து பிரியாணியை லேசாக ஒரு முறை கிளறி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான பிரியாணி ரெடி.
குறிப்புக்கள் -
  1. காலிபிளவர், பீன்ஸ் என்று அவரவர் விருப்பப்படி காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

3 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...