Pages

Friday, January 3, 2014

உருளைக்கிழங்கு சீரக வறுவல் / Potato Fry

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
  2. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. சீரகத்தூள் - 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு - தேவையானஅளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு -1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் -1
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. குக்கரில் உருளைக்கிழங்கு மற்றும் அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும்.
  2. நன்றாக ஆறியதும் கிழங்குகளை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும். 
  5. அதன் பின் வெட்டி வைத்துள்ள கிழங்கு துண்டுகளை போட்டு 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
  6. இறுதியில் சீரகத்தூள் போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான வறுவல் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறலாம் .

2 comments: