Pages

Saturday, January 25, 2014

காலிபிளவர் பட்டாணி குருமா / Cauliflower GreenPeas Kuruma

                                                       


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காலிப்ளவர் - 1 சிறியது 
  2. பச்சை பட்டாணி - 50 கிராம் 
  3. தக்காளி - 1
  4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. மல்லித்தழை - சிறிது                                        
வறுத்து பொடிக்க -
  1. பட்டை - 1 இன்ச் அளவு 
  2. கிராம்பு - 2
  3. சோம்பு - 1 தேக்கரண்டி 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1/2 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 1
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது                              
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 25 கிராம்                    
செய்முறை -
  1. பச்சை பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  2. முதலில் 300 மில்லி வெந்நீரில் முழு காலி பிளவரை போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து காலிபிளவரை எடுத்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.                                                                       
  4. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். தேங்காயையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் பட்டை கிராம்பு பொடி, வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.                                                  
  7. நன்கு சுருள வதங்கியதும் காலிபிளவருடன் ஒரு கை தண்ணீர் தெளித்து வேகும் வரை நன்கு வதக்கவும்.
  8. காலிபிளவர் நன்கு வெந்ததும் வேக வைத்துள்ள பட்டாணி, மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.                                                  
  9. மசாலா வாடை அடங்கி வரும் போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கிரேவி கெட்டியானதும் மல்லித் தழையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். 
  10. சுவையான காலி பிளவர் பட்டாணி குருமா ரெடி.

No comments:

Post a Comment