Pages

Tuesday, October 29, 2013

சாளை மீன் வறுவல்/ Chaala Fish Fry / Sardine Fish Fry

                                       
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சாளை மீன்/ மத்தி மீன் - 10
  2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
  5. எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி 
  6. எண்ணெய் - 100 மில்லி 
     செய்முறை -
  1. முதலில் மீனின் தலைப்பகுதி, வால் பகுதி இரண்டையும் வெட்டி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.                                                                                  
  2. மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு மூன்றையும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வைத்துக் கொள்ளவும்.
  3. பேஸ்ட்டை எடுத்து மீனின் மீது நன்கு தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து மீன்களை போடவும். சிறுது நேரம் கழித்து திருப்பி போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் நன்கு சிவந்ததும் எடுத்து விடவும்.                                                                      
  5. மீதமுள்ள எல்லா மீன்களையும் இதே போல் வறுத்து எடுக்கவும். சுவையான சாளை மீன் வறுவல் ரெடி.

1 comment:

  1. wow aunty.. I like this so much.. I'll definitely try this.. :) Hope u remember me :)

    ReplyDelete