பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- கொண்டைக்கடலை - 200 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் -2
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
- முதலில் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஊறிய கொண்டைக்கடலை, தேவையான அளவு தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் பச்சைமிளகாய், காயத்தூள், கறிவேப்பிலை, கொண்டைக்கடலை சேர்த்து நன்றாக கிளறவும்.
- இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான சுண்டல் ரெடி.
No comments:
Post a Comment