Thursday, October 31, 2013

முந்திரிக் கொத்து

தேவையான பொருள்கள் -
  1. மைதா மாவு - 75 கிராம் 
  2. பாசிப்பயறு  - 100 கிராம் 
  3. அச்சு வெல்லம் - 100 கிராம் 
  4. பச்சரிசி  - 50 கிராம்
  5. தேங்காய் துருவல் - 50 கிராம்
  6. முந்திரி பருப்பு - 10
  7. ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
  8. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  9. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி 
  10. உப்பு - 1/4 தேக்கரண்டி 
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். வறுத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே கடாயில் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு இரண்டையும் நன்கு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. அதே கடாயில் பச்சரிசியை போட்டு வறுத்துக் கொள்ளவும். வறுத்த எல்லா பொருள்களையும் சிறிது நேரம் ஆற விடவும்.
  4. வறுத்த பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  5. தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
  6. அச்சு வெல்லத்துடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி வடி கட்டி வைத்துக் கொள்ளவும்.
  7. மைதா மாவில் 1/4 தேக்கரண்டி உப்பு, சோடா உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  8. அரைத்த பாசிப்பருப்பு, பச்சரிசி, தேங்காய் துருவல், முந்திரிபருப்பு பொடி, ஏலக்காய் பொடி, நெய் எல்லாவற்றையும் கலந்து வெல்ல பாகை சிறிது சிறிதாக ஊற்றி உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் 4 அல்லது 5 உருண்டைகளை எடுத்து மைதா மாவில் முக்கி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  10. மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரிக்கொத்து ரெடி.

2 comments:

  1. Festival time snack is the best for our guests.

    ReplyDelete
  2. அருமையான முந்திரி கொத்து . மூன்று மூன்றாய் உருண்டைகளை மைதாமாவில் முக்கி போடுவார்கள் மூன்றும் ஒட்டிக் கொண்டு இருக்கும் கொத்தாய்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...