Pages

Saturday, October 26, 2013

பாகற்காய் பொரியல் / BitterGourd Fry


பரிமாறும்  அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாகற்காய் - 150 கிராம் 
  2. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. சின்ன வெங்காயம் - 10
  5. கறிவேப்பிலை - சிறிது
  6.  பச்சை மிளகாய் - 1
செய்முறை -
  1. பாகற்காயை பொடிதாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய்  ஊற்றி  சூடானதும் கடுகு  போட்டு  தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொவன்றாக சேர்த்து  வதக்கவும்.
  3. வெங்காயம் பாதி வதங்கியதும்  பாகற்காய், சர்க்கரை, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். சர்க்கரை சேர்த்திருப்பதால் சிறிது தண்ணீர் விடும். சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  4. தண்ணீர்  நன்கு வற்றியதும், பாகற்காய் பொன்னிறமாக வந்ததும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி  அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பாகற்காய் பொரியல் ரெடி.

2 comments: