Pages

Tuesday, September 24, 2013

சிக்கன் குழம்பு / Chicken Curry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிக்கன் - 300 கிராம் 
  2. தக்காளி - 1
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு
  5. கொத்தமல்லி தழை - சிறிது
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 4 மேஜைக்கரண்டி 
  3. பெருஞ் சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. பட்டை - 1 இன்ச் அளவு 
  5. கிராம்பு - 2
  6. இஞ்சி - 1 இன்ச் அளவு 
  7. பூண்டு - 4 பல் 
  8. தேங்காய் - 50 கிராம் 
  9. சின்ன வெங்காயம் - 7
   தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - சிறிய துண்டு 
  3. கிராம்பு - 1
  4. வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. முதலில் சிக்கனை  சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  2. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். மிதமான தீயில் வைத்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்.
  4. வறுத்தவற்றை ஆறியதும் மிக்ஸ்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
  7. பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். சிக்கன் பாதி வெந்ததும் 300 மில்லி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி குக்கரை மூடி விடவும்.
  8. நீராவி வந்ததும் வெயிட் போடவும். 4 விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். அல்லது உங்கள் குக்கருக்கு ஏற்ப விசில் விட்டு இறக்கவும்.
  9. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து குழம்பை பாத்திரத்திற்கு மாற்றி விடவும். கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கி விடவும். சுவையான சிக்கன் குழம்பு ரெடி.
குறிப்புகள் -
  1. எலும்போடு இருக்கும் சிக்கன் துண்டகள் தான் குழம்பிற்கு நல்ல ருசியை கொடுக்கும்.

13 comments:

  1. ஆஹா ! பார்க்கும் பொழுதே வாயுறுதே ! சூப்பர்.

    ReplyDelete
  2. உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. குழம்பு கமகமக்குது..வறுத்து அரைச்ச குழம்பு எப்போழுதும் தனி சுவைதான்..

    ReplyDelete
  4. மேனகா முதன் முதலாக எனது வலைப்பூவுக்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. Thanks to your rrrecip. I searched several but with cooker it is the best. Going to make now..

    ReplyDelete
  6. அருமையான டிஷ்.

    ReplyDelete
  7. இன்று தான் உங்களின் முழுபதிவுகளையும் பார்த்தேன்.. சமையல் கத்துக்க இனி யாரிடமும் கேட்கப்போவது இல்லை.உங்களைப்பார்த்தே என் மனைவிக்கும் சொல்லிதந்துவிடுவேன்.. நன்றி.. அம்மா..

    ReplyDelete
  8. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. சிக்கன் பெரிய பெரிய துண்டுகளாகவும் போடலாமா அல்லது சிறிய சிறிய துண்டுகளாக போட்டால்தான் சிக்கன் குழம்பு நன்றாக இருக்குமா?

    ReplyDelete
  10. சிக்கன் குழம்புக்கு பெரிய துண்டுகளாக போட தேவை இல்லை. நடுத்தர சைசில் வெட்டி போடவும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete