Pages

Tuesday, August 13, 2013

ஆப்பம் - மற்றொரு முறை

பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - ஒரு கப் 
  2. பச்சரிசி - ஒரு கப் 
  3. வெள்ளை முழு உளுந்து - 2 மேஜைக்கரண்டி 
  4. சாதம் - 1/2 கப் 
  5. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  6. சோடா மாவு - 1 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
செய்முறை -
  1. இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. கிரைண்டரில் சாதம், தேங்காய் துருவல், ஊற வைத்த அரிசி, உளுந்து அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். 8 மணி நேரம் மாவை  புளிக்க விடவும்.
  3. சுடுவதற்கு முன்னால் உப்பு, சோடா உப்பை சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். மாவை சிறிது  தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.
  4. பிறகு அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி போட்டு வேக வைத்து ஆப்பத்தை சுட்டு எடுக்கவும்.
  5. ஆப்பத்தை தேங்காய்பால் அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment