Pages

Monday, May 13, 2013

பிடி கொழுக்கட்டை / Pidi Kozukkatai


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புழுங்கல் அரிசி - 200 கிராம்
  2. உப்பு - தேவையானஅளவு
  3. தேங்காய்துருவல் - 100 கிராம்
தாளிக்க -
  1. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  2. கடுகு - 2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
  4. மிளகாய் வத்தல் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. அரிசியை கழுவி தேவையான அளவு தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின் அரிசி,தேங்காய் துருவல் மற்றும் உப்பை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். நடுநடுவே தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். 
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. பிறகு அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி மாவு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
  5. கடாயிலிருந்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். எலுமிச்சம்பழம் அளவு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  6. ஒவ்வொரு உருண்டையையும் ஓவல் சைஸ்ஸில் பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். 20 கொழுக்கட்டை வரை வரும்.
  7. கொழுகட்டையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.

5 comments:

  1. சுவை. எனக்கும் இது சாப்பிடப் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஸ்ரீ ராம்.

      Delete
  2. அருமையாக இருக்கும் . படங்கள் அழகு

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  4. அடிக்கடி முன்பு செய்வேன்.நல்ல ருசி.

    ReplyDelete