Pages

Thursday, April 4, 2013

ரவை கேசரி / Rava Kesari


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான  பொருள்கள் -
  1. ரவை - 1 கப் (100 கிராம்)
  2. சர்க்கரை - 2 கப் (200 கிராம்)
  3. தண்ணீர் - 2 கப் (200 மில்லி)
  4. நெய் - 4 மேஜைக்கரண்டி
  5. கேசரி கலர் பவுடர் - சிறிது
  6. முந்திரி பருப்பு - 10
  7. காய்ந்த திராட்சை -10
  8. ஏலக்காய்த் தூள் -1 தேக்கரண்டி
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ரவையைப் போட்டு நன்றாக வறுத்து தனியே எடுத்து  வைக்கவும். சிம்மில் வைத்து கருக விடாமல் வறுக்கவும்.
  2. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. பின்னர் அதே கடாயில் 2 கப் தண்ணீர், ஒரு மேஜைக்கரண்டி நெய், கேசரி கலர் போட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும் ரவையைப் போட்டு கை விடாமல் கிளறவும்.
  4. ரவை நன்கு வெந்ததும் 2 கப் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக தூவி (ஒரு மேஜைக்கரண்டி அளவு) நன்கு கை விடாமல் கிளறவும்.
  5. நன்கு சுருள வதங்கியதும், வதக்கிய முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, ஏலக்காய் பவுடர், மீதமுள்ள நெய் எல்லாவற்றையும் போட்டு நன்கு கிளறி இறக்கி விடவும். சுவையான கேசரி ரெடி.     

3 comments: