Wednesday, March 6, 2013

சாம்பார் / Sambar



பரிமாறும் அளவு - 4 நபருக்கு 

தேவையான பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 100 கிராம் 
  2. காய்கறி - 100 கிராம் (முருங்கை அல்லது கத்தரிக்காய் அல்லது கேரட் அல்லது வெண்டை அல்லது உருளை அல்லது அனைத்தும் சேர்ந்து )
  3. தக்காளி - 1
  4. புளி - நெல்லிக்காய்  அளவு 
  5. சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி 
  6. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி 
  7. பெருங்காயம் - ஒரு கிள்ளு 
  8. மல்லித்  தழை  - சிறிது 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. தண்ணீர் - 1 கப் (200 ml)
  11. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 
அரைக்க - ( optional )
  1. தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி 
  2. சின்ன வெங்காயம் - 10
தாளிக்க -
  1. கடுகு - 1 தேக்கரண்டி
  2. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  3. கறிவேப்பில்லை - சிறிது 
  4. சின்ன வெங்காயம் - 3
செய்முறை -
  1. துவரம் பருப்பு, பெருங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
  3. அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
  4. காய்கறி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் 1 கப் தண்ணீர், காய்கறி, தக்காளி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடங்கள்  கொதிக்க விடவும்.
  6. பின்னர் சாம்பார் பொடியை சேர்த்து 8-10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  7. பின்னர் புளி தண்ணீரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  8. அரைத்து வைத்ததை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  9. இப்பொது மசித்த பருப்பை சேர்த்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தழையை தூவவும்.
  10. சிறிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து இதை சாம்பாரில் சேர்க்கவும்.
  11. சுவையான சாம்பார் ரெடி. இதை சாதம், தோசை, இட்லி மற்றும் பொங்கலுடன் பரிமாறலாம்.
குறிப்புகள் -
  1. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்தால் சீக்கிரமாக கரையும்.
  2. அரைத்த விழுதை சேர்க்கவில்லை என்றால் , சின்ன வெங்காயத்தை மட்டும் மற்ற காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய்யை தவிர்த்து விடவும்.
  3. புளிப்பாக விரும்புவோர் சிறிது மாங்காய் துண்டுகளை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து செய்யலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...